Sunday 18th of January 2026 - 03:56:24 AM
சிறையில் இருந்து தப்பி, கஞ்சா வியாபாரியுடன் ஜல்சா. சொந்த குழந்தைகளை கொன்ற சைக்கோ பெண்: டயானே டௌன் 4
சிறையில் இருந்து தப்பி, கஞ்சா வியாபாரியுடன் ஜல்சா. சொந்த குழந்தைகளை கொன்ற சைக்கோ பெண்: டயானே டௌன் 4
எல்லாளன் / 23 மே 2024

முந்தைய பகுதிகள்:  பாகம் 1         பாகம் 2      பாகம் 3 

நிக்கர்போக்கர் திருமணம் ஆனவர். ஸ்டீவை போலவே டயனேவின் பள்ளி காலத்தில் இருந்தே பழகி வந்த நிக்கர்போக்கர் ஸ்டீவை விட கொஞ்சம் புத்திசாலி எனவே, டயனேவின் பசப்பு பருப்புகள் நிக்கர்போக்கரிடம் வேகவில்லை. டயனேவை ஊறுகாய் போல் அவ்வப்பொழுது தொட்டு ருதித்து விட்டு டயனே முரண்டு பிடிக்கும் போதெல்லாம் சர்வீஸ் சார்ஜ் கொடுத்து மேனேஜ் பண்ணிக் கொண்டிருந்தார். திருமணம் பற்றி பேசிய போதெல்லாம்  ஏதாவது காரணம் சொல்லி டயனேவின் வாயை அடைத்த நிக்கர்போக்கர் கடைசியாக சொன்ன காரணம். டயனேவின் குழந்தைகள்.
  
விசாரணை, பிரச்சினைகள் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், கிடைத்த கேப்பில் எல்லாம் கெடா வெட்டி தன் க்ரைம் ரேட்டை ஏற்றிக் கொண்டே இருந்தாள் டயனே, அதன் காரணமாக, எமி எலிசபெத் என்ற இன்னொரு குழந்தையை பெற்றெடுத்தாள். அப்பா யார் என்றே தெரியாத அந்த குழந்தையை, க்ரிஸ், ஜாகி பாப்காக் என்ற தம்பதிகள் தத்தெடுத்துக் கொண்டார்கள்.
9 மாதங்கள் தொடர்ந்து தீவிர விசாரணை நடை பெற்றது.

டயனே மீண்டும் மீண்டும் சொன்ன பரட்டை தலை நம்பியார் கதை நம்பும்படியாக இல்லையென இன்ஸ்பெக்டர் உட்பட மொத்த இன்வெஸ்டிகேஷன் டீமும் ரிஜக்ட் செய்ய, கடைசியில் ஒரு நாள் மருத்துவர்களின் தீவிர தொடர் சிகிச்சையின் பலனாக டயனேவின் மகள் கிறிஸ்டி பேச தொடங்கினாள். அந்த நொடியே டயனேவின் கட்டுகதைகள் காலாவதியாகி அவளது கடைசி அத்தியாயம் எழுத்தப்பட்டு விட்டது.

வீட்டில் இருந்து தன்னை தன் தங்கை தம்பியுடன் காரில் அழைத்து சென்ற அம்மா டயனே, ஓல்ட் மொஹவக் காட்டு சாலையின் ஓரத்தில் இருட்டில் காரை நிறுத்தி விட்டு துப்பாக்கியால் சுட்டார் என மகள் கிறிஸ்டி நடு நடுங்கியபடி வாக்குமூலம் கொடுக்க. நிம்மதி பெருமூச்சுடன் கைவிலங்கை கையிலெடுத்தர்கள் ஸ்பிரிங்பீல்ட் போலிஸ்.
 
நிக்கர்போக்கரை திருமணம் செய்ய தடையாக இருந்த குழந்தைகளை தன் .22 காலிபர் பிஸ்டலால் சுட்டு விட்டு, அதே பிஸ்டலால் தன் இடது கையிலும் சுட்டுக் கொண்டு, மயங்கிய நிலையில் இருந்த குழந்தைகள் இறந்து விட்டார்கள் என நினைத்து, மெக்கன்ஸு வில்மேட் ஹாஸ்பிடலுக்கு குழந்தைகளை கொண்டு வந்து நாடகம் போட்ட டயனேவின் துரதிர்ஷ்டம், டாக்டர்கள் இரண்டு குழந்தைகளை காப்பாற்றி விட்டார்கள். என நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த, போலிஸ் 1984ம் ஆண்டு பிப்ரவரி 28ம் திகதி டயனேவை கைது செய்தார்கள். 

ஜூன் 17ம் திகதி, டயனேவின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, ஒரு ஆயுள் தண்டனையும் 50 வருட சிறைதண்டனையும் வழங்கப்பட்டது. ஓரகன் மாஹாண தலை நகர் சேலம். பெண்கள் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டாள் டையனே.

டயனேவின் வழக்கில் அரசு தரப்பில் வாதிட்டு டயனேவிற்கு தண்டனை வாங்கி கொடுத்த வழக்கறிஞர் ப்ரட் ஹுஹி டையனேவின் குழந்தைகள் கிறிஸ்டி மற்றும் டேனியலை 1986ம் ஆண்டு தத்தெடுத்துக் கொண்டார்.

எல்லாம் முடிந்தது என டயனேவின் பைலை தூக்கி பரணில் போட போன போலிஸிற்கு, பொறுங்கள் எதற்கு இந்த அவசரம் என அடுத்த அதிர்ச்சியை கொடுத்தாள் டயனே.

1987 ம் ஆண்டு ஜூலை 11ம் திகதி. இரவு, எந்த போலிஸை எப்படி ஏமாற்றினாள் என தெரியவில்லை,  18 அடி உயர முள்வேலி தடுப்பு சுவரை தாண்டி குதித்து சிறையில் இருந்து தப்பிதாள் டயேனே. சிறையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அட்வகேட் ப்ராட் ஹூஹின் வீடு. குழந்தைகள் கிறிஸ்டி மற்றும் டேனியலை கொலை செய்ய டயனே அங்கு வந்து விடுவாள் என அஞ்சிய போலிஸ் ஹூஹிவின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போட்டார்கள்.

ஆனால், டயனே தனது ஜெயில்-மேட் மரியேவின் வீட்டில் தஞ்சம் புகுந்தாள். ஜெயில்-மேட் மரியே இங்கு இருந்தாள் நீ மாட்டிக் கொள்வாய் என சொல்லி தனது முன்னாள் கணவன் வெயின் சைபரின் வீட்டிற்கு டயனேவை அனுப்பி விட்டாள்.

தன் கிரிமினல் பார்ட்னர் ஒருவனுடன் தங்கியிருந்த, முழு நேர ஹெராயின் கொடுக்கியான வெயின் சைபர் டயனேவிற்கு அடைக்கலம் கொடுத்தான் கைமாறாக அவ்வப்போது டயனேவை பதம் பார்க்க அனுமதி கேட்டான். 

3 வருடங்கள் சிறையில் கிடந்து காய்ந்து போயிருந்த டயனே பத்தோட பதினென்னு அதுல நீ ஒண்ணு அதுக்கென்ன அனுபவிச்சிட்டு போ என மண்டையை ஆட்டினாள். கொஞ்ச நாட்கள் குஜாலாக இருந்த படி அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள் டயனே.

சிறையில் டயனேவின் உடமைகளுடன் இருந்த மரியேவின் வீட்டு அற்றஸை பார்த்த போலிஸ், மரியேவை பிடித்து மண்டையில் ரெண்டு போட அவள் தன் முன்னால் கணவன் ஹெராயின் கொடுக்கி வெயின் சைபரின் வீட்டை கைகாட்டினாள். டயனே சிறையில் இருந்து தப்பிய பத்தாவது நாள், ஜூலை 22ம் திகதி, வெயின் சைபரின் வீட்டை சுற்றி வளைத்த 40 போலிஸார், உள்ளே வெயின் ஸைபருடன் ஒண்ணுமண்ணாக இருந்த டயனேவை கைது செய்தார்கள்.
  
சிறையில் இருந்து தப்பியதற்காக மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற டயனேவே, உனக்கு உள்ளூர் ஜெயில் பத்தாது, உலக பேமஸ் ஜெயில்தான் சரியென, நியூ ஜெர்ஸி க்ளிண்டன் பெண்கள் சீர்திருத்த சிறையில் அடைத்தனர்.
 
இன்று. வளர்ந்து தங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வரும் டயனேவின் குழந்தைகள் கிறிஸ்டி ஆன், ஸ்டிபன் டேனியல், எமி எலிஸபெத் மூவரும் அவ்வப்பொழுது அமெரிக்காவின் டிவி ஷோக்களில் பங்கு பெற்று தங்கள் அம்மாவின் புத்திசாலித்தனத்தை மாறி மாறி காறி துப்பி வருகிறார்கள்.

இன்றுவரை பரோல் கிடைக்காமல் சிறையில் தன் சக கைதிகள்,  விசாரணைக்கு வரும் போலிஸ், பேட்டிக்கு வரும் மீடியா என அனைவரிடமும் என்னை நம்புங்கள் நான் நல்லவள் என பழைய பரட்டை தலை நம்பியாரின் கதையையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறாள் தற்போது  68 வயதாகும் டயனே டவுன்.

டிரண்டிங்
உடல் இருக்கு, தலை இல்லை. திகில் ஊட்டும் பள்ளத்தாக்கில் நடக்கும் மர்மங்கள்.
மர்மங்கள் / 31 டிசம்பர் 2024
உடல் இருக்கு, தலை இல்லை. திகில் ஊட்டும் பள்ளத்தாக்கில் நடக்கும் மர்மங்கள்.

கனடாவில் இருக்கும் ஒரு பள்ளத்தாக்கில் நடக்கும் நிகழ்வுகள் குழை நடுங்க வைக்கும் அளவிற்கு ஆபத்து நிறைந

536 இல் உலகம் இருண்டது: வரலாற்றின் மோசமான ஆண்டு
வரலாறு / 05 மே 2025
536 இல் உலகம் இருண்டது: வரலாற்றின் மோசமான ஆண்டு

கி.பி. 536 - உலக வரலாற்றுல மனிதன் அனுபவிச்ச மோசமான ஆண்டு; இருட்டு, பசி, நோய், பஞ்சம், பேரரசுகளோட வீழ

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி