Thursday 17th of July 2025 - 05:55:11 PM
கடையில் வாங்கிய ஆரஞ்சு ஜூஸை திருப்பிக் கொடுக்க சென்ற நபருக்கு அடித்த ஜாக்பாட்.
கடையில் வாங்கிய ஆரஞ்சு ஜூஸை திருப்பிக் கொடுக்க சென்ற நபருக்கு அடித்த ஜாக்பாட்.
Kokila / 21 மே 2025

2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த ஒருவர் ஆரஞ்சு ஜூஸ் வாங்கி விட்டு அதை மீண்டும் திருப்பிக் கொடுக்க சென்று லாட்டரி டிக்கெட் உடன் வீடு திரும்பியுள்ளார். தனது மனைவியின் அறிவுறுத்தலை பின்பற்றி சிறிது பணத்தை சேமிக்க முயன்ற சவாமி என்ற நபர் அந்த ஆண்டின் பவர்பால் ஜாக்பாட்டின் வின்னராக அறிவிக்கப்பட்டார். சவாமி எப்படி இந்த 315 மில்லியன் டாலரை வென்றார் என்ற கதை நம்ப முடியாத அளவிற்கு மனதை கவரும். 

இதை கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் சாதாரணமாக ஒரு ஆரஞ்சு ஜூஸ் வாங்க கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது கோடீஸ்வரன் ஆனால் எப்படி இருக்கும் என்று. நம்மில் பலருக்கு இது வெறும் பகல் கனவாகத் தான் இருக்கும். உண்மையில் நடந்தால் அதை விவரிக்க முடியாத அளவிற்கு பரவசமடைந்து விடுவோம். இப்படி ஒரு நிகழ்வு தான் சவாமி என்ற நபருக்கு நடந்தது.

டயேப் சவாமி ஆப்ரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் குடிபுகுந்தார். இவருக்கு அப்போதைய வயது 55. 1996 முதல் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு உணவு இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் அக்கௌன்டன்ட் ஆக வேலை செய்து வருகிறார். அதிர்ஷ்டம் தனது வீட்டு கதவை தட்டுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே தனது வீட்டை மறுகட்டுமானம் செய்திருந்தார். அவரது 17 வயது மகளின் கல்லூரி செலவுகளுக்கு இந்த அடமானம் முக்கியமானதாக இருந்தது.  

சுமார் ஒரு வாரம் கழித்து நியூ ஜெர்சியின் ஹேக்கன்சாக்கில் உள்ள ஒரு கடைக்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க சென்றுள்ளார். திடீரென்று ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம் என்று ஒரு யோசனை. வீட்டுக்கு வாங்கிட்டு போலாமே என்று நினைத்து ஐந்து டாலருக்கு ஒரு ஜூஸையும் வாங்கியுள்ளார். 

வீட்டிற்கு திரும்பியதும் ஐந்து டாலருக்கு சவாமி ஒரு ஆரஞ்சு ஜூசை வாங்கியுள்ளார் என்று தெரிந்ததும் மனைவி 'தையத்தக்க' என்று குதிக்க ஆரம்பித்து விட்டார். "ஐந்து டாலர் கொடுத்து ஒரு ஜூசை வாங்கியிருக்கீங்களா?இதையே 2.5 டாலருக்கு வேறொரு கடையில் வாங்கி இருக்கலாம். உடனே திருப்பி கொடுத்துட்டு வாங்க" என்று சொன்னதும் மனைவியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு உடனே ஆரஞ்சு ஜூசை திருப்பிக் கொடுக்க புறப்பட்டுச் சென்றார் சவாமி. 

தனது காரை எடுத்துக்கொண்டு அதே கடைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் லைனில் காத்திருக்க வேண்டி இருந்தது. கடையில் வைத்துள்ள மற்ற பொருட்களை எல்லாம் ஒரு நோட்டமிட்டார். அப்போது பளிச்சென்று கண்ணில் பட்டது 'பவர்பால் ஜாக்பாட்' லாட்டரி டிக்கெட். வாங்கிய ஆரஞ்சு ஜூசை திருப்பிக் கொடுத்துவிட்டு இரண்டு லாட்டரி டிக்கெட்டை வாங்கிக்கொண்டு மீதமுள்ள பணத்தை திரும்ப வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பினார். 

வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது சற்றென்று ஒரு யோசனை. இந்த லாட்டரி டிக்கெட் வாங்கியதற்காக மனைவி திட்டுவாளோ என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்கு சென்றடைந்தார். நல்ல வேலை அவரது மனைவி அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை. 

அடுத்த நாள் காலை சவாமி தனது காரை சுத்தம் செய்வதற்காக வெளியே செல்ல வேண்டியிருந்தது. அப்போதுதான் அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டின் ஞாபகம் வந்தது. உடனே டிக்கெட்டை சரிபார்க்க அங்குள்ள ஒரு கடையின் ஸ்கேனரை பயன்படுத்தினார். முதல் டிக்கெட்டில் வெற்றியாளர் இல்லை என்றது. இருப்பினும் இரண்டாவது டிக்கெட்டை சரி பார்க்கும் போது "இதனை சில்லறை விற்பனையாளரால் பார்க்கப்பட வேண்டும்" என்று காட்டியது. சவாமி உடனே கேஷியரிடம் கொண்டு சென்று சரி பார்த்தார். கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தது. அவர் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் 292.2 மில்லியனில் ஒன்று.

லாட்டரி டிக்கெட் சரிபார்க்கும் கேஷியர் "ஓ மை காட், ஓ மை காட்" என்று பதில் அளிக்க, ஆச்சரியத்தை கட்டுப்படுத்த முடியாமல் "இது மிகப்பெரிய வெற்றி" என்றார். அடுத்த நொடியே 62 வயதான சவாமியின் தலையெழுத்து மாறியது. இப்போது அவர் பவர்பால் ஜாக்பாட்டின் 315 மில்லியன் டாலர் தொகையின் வெற்றியாளர்.

வழக்கமாக அரை மணி நேரத்தில் வீட்டுக்கு சென்றடையக் கூடிய சவாமி அன்று அவர் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு மணி நேரத்திற்கு மேல். வீட்டுக்கு சென்றடைந்ததும் அவரது மனைவி வழக்கம் போல் "கடைக்கு போய்ட்டு வர இவ்வளவு நேரமா?" என்று கேட்டார். அதற்கு சவாமி "நான் இப்போ கோடீஸ்வரன்" என்று நடந்தவை அனைத்தையும் கூறினார்.

5, 000 டாலருக்கும் அதிகமான லாட்டரி வெற்றிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் எப்போதும் 24% வரியை விதிக்கிறது. மாநிலங்கள் தங்கள் சொந்த விகிதங்களை தீர்மானிக்கின்றன. நியூ ஜெர்சி $500,000 க்கும் அதிகமான வெற்றிகளுக்கு 8% வரி விதிக்கிறது. சவாமியின்‌ 315 மில்லியன் டாலர் தொகையில் இருந்து சுமார் $99.2 மில்லியன் எடுக்கப்பட்டு, 210.8 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டது. 

செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்ட போது சவாமி தனக்கு கிடைத்த பெரும் தொகையை தனது பிள்ளைகளின் கல்வி செலவுக்கு மற்றும் அவருடன் வேலை பார்க்கும் சக நண்பர்களுக்கும் கொடுத்து உதவப் போவதாக கூறியுள்ளார். "இப்போதெல்லாம் எனக்கு ஆரஞ்சு ஜூஸ் குடிக்க மிகவும் பிடித்திருக்கிறது" என்று கேலியாக சிரித்தபடியே கூறினார். சவாமி வழக்கமாக லாட்டரி டிக்கெட் வாங்கும் நபராக இல்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட் அவரை ஓவர் நைட் பணக்காரர் ஆக்கியுள்ளது.

டிரண்டிங்
கேரள தம்பதி கொடூர கொலை. ஆவடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.
க்ரைம் / 01 மே 2024
கேரள தம்பதி கொடூர கொலை. ஆவடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.

மாலை 5 மணியளவில் இரு சக்கர வாகனம் ஒன்றில் வந்த இரண்டு நபர்கள் சிவன் நாயரை சந்தித்து பேசியுள்ளனர். இர

இறந்த சடலத்தின் மோதிரத்தை திருட சென்றவர்களை விரட்டி அடித்த அதே உருவம்.
வரலாறு / 03 ஜூன் 2025
இறந்த சடலத்தின் மோதிரத்தை திருட சென்றவர்களை விரட்டி அடித்த அதே உருவம்.

வரலாற்றில் நாம் அதிகமாக உயிருடன் புதைக்கப்பட்ட கதைகளை பற்றி கேட்டிருப்போம். ஏனெனில் மருத்துவம் அந்த

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி