ஐந்து வயது சிறுவன் ப்ருடஸ் தன் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த குப்பை மேட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் கண்களில் பட்டது அந்த குப்பை மேட்டில் கிடந்த ஒரு ஜோடி அழகிய ஹை ஹீல்ஸ். அந்த லெதர் ஹைஹீல்ஸில் பதிக்கப்பட்டிருந்த வைரம் போன்ற கற்களா அல்லது அதன் சிகப்பு நிறமா? என்னவென்று தெரியவில்லை ஆனால் பெண்கள் அணியும் அந்த ஹை-ஹீல்ஸ் செருப்புகள் ப்ருடஸை வெகுவாக கவர்ந்தன. ஓடிச் சென்று அந்த ஹை-ஹீல்ஸ் செருப்புகளை எடுத்தவன், அவற்றை அணிந்து கொண்டு வேகமாக தனது வீட்டிற்கு சென்றான்.
கிச்சனில் இரவு உணவு தயாரிப்பில் மும்முரமாக இருந்த தாய் மரியே எய்லினிடம் ஓடி வந்து தனது காலில் அணிந்திருந்த ஹை-ஹீல்ஸ்களை காட்டி நல்லாயிருக்கா? என்றான்.
"அறிவு கெட்ட முண்டமே. எங்கிருந்துந்து எடுத்தாய் இதை. மரியாதையாக கொண்டு போய் குப்பையில் போடு." என ப்ருடஸின் முதுகில் ரெண்டு போட்டாள் தாய் மரியே எய்லின். அழுதபடி அங்கிருந்து சென்றான் ப்ருடஸ். மரியே எய்லினுக்கு தன் மகனின் மனதிற்குள் மிக வக்கிரமான கொடூர பாலியல் சைக்கோ பிரசவத்திற்கு தயாராயிருந்தது அப்போது தெரியாது.
சில நாட்கள் ஓடிப்போனது. ஒருநாள் எதோச்சையாக மகனின் கட்டிலுக்கு அடியில் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருந்த பை ஒன்றை கண்டால் மரியே எய்லின். என்ன ஏது என அந்த பையை எடுத்து பிரித்து பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
உள்ளே, பெண்கள் அணியும் ஹை-ஹீல்ஸ்கள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் பல சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. அதிர்ச்சியுடன், எதற்காக இவற்றை சேகரித்து வைத்துள்ளான் ப்ருடஸ் என அறிந்து கொள்வதற்காக, அந்த பையை இருந்தபடியே மூடி அப்படியே காட்டிலுக்கு அடியில் பழையபடி வைத்து விட்டாள். அந்த உள்ளாடைகள் மற்றும் ஹை-ஹீல்ஸ்களை சேகரித்து பழைய ஆடைகள் செருப்புகளை வாங்கும் கடைக்காரர்களிடம் விற்று அந்த பணத்தில் ஏதும் திண்பண்டங்கள் வாங்கி தின்கிறானோ? என தன் மகன் ப்ருடஸை குழந்தையாக நினைத்துக் கொண்டிருந்தாள் மரியே எய்லின். ஆனால், ப்ருடஸ் மொத்தமாக முத்தி பழுத்து ஆல்மோஸ்ட் அழுகிய சைக்கோவாக அப்பொழுதே மாறிவிட்டிருந்தான்.
மகனின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்க தொடங்கிய மரியே எய்லின், ஒருநாள் பூட்டிய அறைக்குள் மகன் ரகசியமாக செய்த காரியத்தை பார்த்து அதிர்ந்து போனாள்.
கட்டிலுக்கு அடியில் ஒளித்து வைத்திருந்த பையை எடுத்த ப்ருடஸ் அதற்குள் இருந்த பெண்களின் உள்ளாடைகள் மற்றும் ஹை-ஹீல்ஸ்களை வெளியில் எடுத்தான். அறைக் கதவு பூட்டப்பட்டுள்ளது என்பதை ஒரு முறை உறுதிசெய்து விட்டு, வேகமாக கண்ணாடிக்கு முன் நின்று தனது ஆடைகளை களைந்தான். கண்ணாடியில் தன் நிர்வாண உடலை ரசித்தபடியே பெண்களின் உள்ளாடைகள் மற்றும் ஹை-ஹீல்ஸ்களை அணிந்து அங்கும் இங்கும் நடந்தபடி கண்ணாடியில் தன்னை பார்த்து மெலிதாக புன்னகைத்துக் கொண்டான். தன் உடலில் அணிந்திருந்த பெண்களின் உள்ளாடைகளை திட்டு பார்த்து சிலிர்த்தான் ப்ருடஸ். அவனின் அத்தனை நடவடிக்கைகளையும் கதவிடுக்கின் வழியாக பார்த்துக் கொண்டிருந்த தாய் அதிர்ந்து போனாள். கோபத்துடன் வேகமாக கதவை தட்டினாள்.
அமெரிக்காவின் வெம்ஸ்டர் நகரம். ஜெரோம் ஹென்றி ப்ரூடஸ். 1939-ம் ஆண்டு, ஜனவரி 31-ம் திகதி ஹென்றி எர்வின் ப்ருடஸ் - மரியே எய்லின் தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக பிறந்தான். முதல் குழந்தை ஆணாக பிறந்ததால் தனது இரண்டாவது குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டாள் மரியே எய்லின். ஆனால், இரண்டாவது குழந்தையும் மகனாக ப்ருடஸ் வடிவில் வந்து பிறக்க, தன் ஆசையை கெடுத்து பிறந்த ப்ருடஸை அடிக்கடி திட்டி தீர்த்தாள் மரியே எய்லின்.
சிறுவன் ப்ருடஸ் சிறிய தவறு செய்தால் கூட, "பெண்ணாக பிறந்து தொலைத்திருக்கலாமே. ஏன் ஆணாக பிறந்து என் உயிரை வாங்குகிறாய்?" என கரித்துக் கொட்டினாள் மரியே எய்லின். அதேசமயம் முதல் மகன் லாறி மேல் மிகுந்த பாசத்தை பொழிந்தாள் மரியே எய்லின்.
ப்ருடஸின் தந்தை ஹென்றி கடும் கோபக்காரர், முரடன். என்ன பிரச்சினை என்றாலும் முதலில் தன் மகன்களை போட்டு வெளுத்து கட்டி தன் கோபத்தை தணித்து 'ரிலாக்ஸ்' ஆன பின்தான் அந்த பிரச்சினை பற்றியே சிந்திப்பார். அப்பாவின் அடிகள் மற்றும் அம்மாவின் திட்டுகள் இரண்டும் சேர்ந்து ப்ருடஸை தனிமைப்படுத்தின.
தன் வீட்டிற்கு அருகில் இருந்த தன் தாயின் வயாதையொத்த பெண் ஒருவருடன் நெருங்கி பழகினான் சிறுவன் ப்ருடஸ். அந்த பெண்ணையே தன் தாயாக நினைக்க தொடங்கினான். துங்கும், உண்ணும் நேரங்கள் தவிர மற்ற நேரங்கள் முழுதும் அந்த பெண்ணுடனேயே இருந்தான். டயபட்டிஸ் (சர்க்கரை நோய்) நோயால் பாதிக்கப்பட்ட அந்த பெண் வீட்டில் படுத்த படுக்கையானாள். அவளது வீட்டார் தவிர அந்நியர்கள் யாரும் (முக்கியமாக சிறுவர்கள்) அந்த பெண்ணை சந்திக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கினார்கள் அந்த பெண்ணின் குடும்பத்தினர். இதனால் தனிமைப் படுத்தப்பட்டன் ப்ருடஸ்.
சில நாட்கள் தமினையில் வெறுப்புடன் வாழ்ந்த சிறுவன் ப்ருடஸிற்கு, தன் தாயின் வயதுடைய இன்னொரு பக்கத்து வீட்டு பெண் பழக்கமானாள். அந்த பெண்ணுடன் பாசம் காட்டி நெருங்கி பழகிய ப்ருடஸிற்கு அந்த நட்பும் வெகு நாட்கள் நீடிக்கவில்லை. எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் ஒருநாள் இறந்து போனாள். தனிமரமானான் ப்ருடஸ்.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு அதிர்ந்து போனான் ப்ருடஸ். வேக வேகமாக அணிந்திருந்த உள்ளாடைகளையும் ஹை-ஹீல்ஸையும் கழட்டி பைக்குள் திணித்து கட்டிலுக்கு அடியில் தள்ளியவன். பதட்டத்தோடு தன் ஆடைகளை எடுத்து அணிய தொடங்கினான். வெளியில் இருந்து வெறி கொண்ட வேங்கையாய் கதவை தட்டிக் கொண்டிருந்தாள் மரியே எய்லின். அவளின் மண்டைக்குள் லட்சம் தேனீக்கள் ஒரே சமயத்தில் ஒன்று கூடி ரீங்காரமிட்டு மூளையில் கொட்டிய உணர்வு. வேகமாக ஆடைகளை அணிந்த ப்ருடஸ் பயத்தில் வியர்த்து நனைந்து கதவை திறந்தான்.