Thursday 19th of June 2025 - 02:57:59 PM
கனவு வழியா ரஷ்யாவை உளவு பார்த்த CIA-வின் ஸ்டார்கேட் பிராஜெக்ட்
கனவு வழியா ரஷ்யாவை உளவு பார்த்த CIA-வின் ஸ்டார்கேட் பிராஜெக்ட்
Santhosh / 19 மே 2025

மனசால தூரத்துல இருக்குற இடங்கள பார்க்க முடியும்னு நம்பி, அமெரிக்காவோட CIA ஒரு சூப்பர் சீக்ரெட் திட்டத்த ஆரம்பிச்சு, உளவு வேலை பார்த்த கதை இது! 1970-கள்ல ஆரம்பிச்சு, 1995 வரை நடந்த இந்த ஸ்டார்கேட் திட்டம், “ரிமோட் வியூயிங்”னு சொல்லப்படுற கான்செப்ட வச்சு, எதிரி நாடுகளோட ரகசியங்கள புரிஞ்சுக்க முயற்சி செஞ்சுது. சோவியத் யூனியனோட பனிப்போர் காலத்துல, இந்த மனசு வாசிக்குற திறன உளவு வேலைக்கு உபயோகப்படுத்தலாமானு CIA ஆராய்ச்சி செஞ்சுது. இது உண்மையாவே வேலை செஞ்சுதா, இல்ல சயின்ஸ் ஃபிக்ஷன் படம் மாதிரி ஒரு கனவா? வாங்க, இந்த மர்ம கதைய நம்ம ஊரு பாஷையில பார்ப்போம்.

1970-களோட ஆரம்பத்துல, அமெரிக்க உளவுத்துறைக்கு ஒரு தகவல் கிடைச்சுது. சோவியத் யூனியன், மனசோட ஆற்றல் வச்சு உளவு பார்க்குற ஆராய்ச்சிக்கு கோடிக்கணக்குல பணம் புழங்குதுனு. இது, “சைக்கோட்ரானிக்” ஆராய்ச்சினு சொல்லப்பட்டு, மனசால பொருட்கள நகர்த்துறது, தூரத்துல இருக்குற இடங்கள பார்க்குறது மாதிரி விஷயங்கள உள்ளடக்கியது. இத கேட்டு, அமெரிக்கா, “நம்மள விட அவங்க முந்திடக் கூடாது!”னு, 1972-ல ஸ்டான்ஃபோர்டு ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்-னு ஒரு கலிஃபோர்னியா ஆராய்ச்சி மையத்தோட இணைஞ்சு, இந்த ஆராய்ச்சிய ஆரம்பிச்சுது. இந்த திட்டம், முதல்ல “ஸ்கேனேட்”, “கிரில் ஃபிளேம்”, “சன் ஸ்ட்ரீக்” மாதிரி பல கோட் பேர்கள்ல நடந்துச்சு, ஆனா 1991-ல இவை எல்லாம் ஒண்ணு சேர்ந்து “ஸ்டார்கேட்”னு பெயர் வாங்கிச்சு.

ஸ்டார்கேட் திட்டத்தோட முக்கிய லட்சியம், “ரிமோட் வியூயிங்”னு சொல்லப்படுற ஒரு திறன பயன்படுத்தி, தூரத்துல இருக்குற இடங்கள், பொருட்கள், ஆளுங்க பத்தி தகவல் சேகரிக்குறது. இதுக்கு, சில பயிற்சி பெற்றவங்கள, “ரிமோட் வியூயர்ஸ்”னு அழைச்சு, அவங்கள மனசால பார்க்க வச்சாங்க. உதாரணமா, ஒரு மூடப்பட்ட அறையில் வெளிச்சம் புகாமல் , மனதை Theta நிலைக்கு நிலைக்கு கொண்டு சென்று , அதோடு ஒரு குறிப்பிட்ட இடத்தோட Coordinates கொடுத்து, “இங்க என்ன இருக்கு?”னு கேப்பாங்க. இந்த வியூயர்ஸ், தங்கள் மனசுல தோணுற பிம்பங்கள, விவரங்கள சொல்லுவாங்க.

ஆச்சரிய பட வைத்த உளவு தகவல்

1978-ல, ஒரு ரிமோட் வியூயர், சோவியத் யூனியனோட செமிபாலாட்டின்ஸ்க் பகுதியில ஒரு விமான தளத்த, அதுல இருக்குற கிரேன்களோட சரியா விவரிச்சு, CIA-வ ஆச்சரியப்படுத்தினாரு. இன்னொரு சம்பவத்துல, 1979-ல, ரோஸ்மேரி ஸ்மித்னு ஒரு வியூயர், ஜைரேல ஒரு சோவியத் விமானம் விழுந்த இடத்த சரியா கண்டுபிடிச்சு, CIA-க்கு முக்கியமான தொழில்நுட்ப தகவல்கள எடுக்க உதவினாரு.

இந்த திட்டத்துல மொத்தம் 40 பேர் வேலை செஞ்சாங்க, அதுல 23 பேர் ரிமோட் வியூயர்ஸ். இவங்களுக்கு முக்கியமானவர், ஜோசஃப் மெக்மோனிகிள், “ரிமோட் வியூயர் நம்பர் 1”னு அழைக்கப்பட்டவரு. 1978-ல இருந்து 1984 வரை, 450 மிஷன்கள்ல பங்கெடுத்து, ஈரான்ல பணயக்கைதிகள கண்டுபிடிக்கவும், தென் ஆஃப்ரிக்காவுல ஒரு KGB ஏஜெண்ட்டோட ரேடியோவ கண்டுபிடிக்கவும் உதவினாரு. ஆனா, இந்த திட்டத்தோட வெற்றிகள் எப்பவும் உறுதியா இல்ல.

1984-ல,  இவர் செவ்வாய் கிரகத்தில் , ஒரு மில்லியன் வருஷம் முன்னாடி  பிரமிடுகள் இருந்ததாவும், உயரமான மக்கள் பத்தியும் விவரிச்சாரு, இது CIA-வுக்கு எந்த பயனும் இல்லாம போனாலும் , இந்த விஷயம் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்து இருக்கலாம் என்று தெரிகிறது .இந்த திட்டம், 20 வருஷத்துக்கு மேல நடந்து, மொத்தம் 20 மில்லியன் டாலர் செலவு செஞ்சுது. ஆனா, 1995-ல, CIA இந்த திட்டத்த மூடி, அதோட ஆவணங்கள வெளியிட ஆரம்பிச்சுது.

#tv3

இந்த ப்ராஜெக்ட்  மூலம் வந்த சில உளவு தகவல்கள் பலரை ஆச்சரியப்படுத்தினாலும் , சில தகவல்கள் வேறு விதமாகவும் உள்ளன. ஸ்டார்கேட் திட்டம், மனிதனுடைய consciousness மற்றும் parallel realities பத்தி ஆராய முயற்சி செஞ்சுது. ரிமோட் வியூயிங், வழியா நேரம், இடம் தாண்டி தகவல பெற முடியும்னு நம்புச்சு. படங்களில் வரும் Multiverse போல, அதாவது வேற உலகங்கள் அல்லது நிகழ்வுகளோட தொடர்பு இருக்கலாம்னு கருதப்பட்டது. ஆனா, இந்த ஆராய்ச்சி, முடிவில் வந்த மர்மங்கள தீர்க்க முடியல. சில வியூவர்ஸ், மனசு வழியா செவ்வாய் கிரகம் போன்று, வேற இடங்கள பார்த்ததா சொன்னாலும், இவை Parallel reality , இல்ல கற்பனையானு உறுதியில்ல. 

 

டிரண்டிங்
536 இல் உலகம் இருண்டது: வரலாற்றின் மோசமான ஆண்டு
வரலாறு / 05 மே 2025
536 இல் உலகம் இருண்டது: வரலாற்றின் மோசமான ஆண்டு

கி.பி. 536 - உலக வரலாற்றுல மனிதன் அனுபவிச்ச மோசமான ஆண்டு; இருட்டு, பசி, நோய், பஞ்சம், பேரரசுகளோட வீழ

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
மனைவியை மருமகனுக்கு தாரைவார்த்த மாமனார்.
பொதுவானவை / 01 மே 2024
மனைவியை மருமகனுக்கு தாரைவார்த்த மாமனார்.

சிக்கந்தர் தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மாமியார் கீதா தேவிக்கும் மருமகன் சிக்கந்தர

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி