Thursday 19th of June 2025 - 04:35:54 PM
23 வகை நாய் இனங்களுக்கு தடை. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.
23 வகை நாய் இனங்களுக்கு தடை. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.
Rajamani / 09 மே 2024

மிகவும் ஆக்ரோஷமான மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் என 23 நாய் இனங்கள் பட்டியலிடப்பட்டு, அவற்றை வளர்ப்பு பிராணிகளாக வளர்ப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் மற்றும் இந்த நாய் இனங்களின் மற்றவகை பயன்பாட்டிற்கும் தடை விதித்துள்ளது தமிழக அரசு.

இது தொடர்பாக வெளியான தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

கால்நடை பராமரிப்பு துறை வல்லுநர்கள் மற்றும் அந்த துறை சார்ந்த பங்கேற்பாளர்கள் இணைந்து அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற 23 நாய் இனக்கள் மிகவும் ஆக்ரோஷமானவை மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த 23 வகை நாய் இனங்கள் மற்றும் அவற்றின் கலப்பினங்களை வளார்ப்பு பிராணிகளாக வளர்ப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் மற்றும் இந்த நாய் இனக்களின் அனைத்து வகை பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்த வகை நாய் இனங்களை வளர்ப்பு பிராணிகளாக வைத்திருப்போர் அவற்றிற்கு உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அவை இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாய் வளர்ப்பவர்கள், அந்த நாயை வெளியில் மக்கள் நடமாட்டம் உள்ள பொது இடங்களுக்கு கூட்டிச் செல்லும்பொழுது கட்டாயமாக சங்கிலியில் கட்டி தற்காப்பு முகக் கவசம் அணிவித்து அழைத்து செல்ல வேண்டும். அந்த சங்கிலி நாய் அளவிற்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் மூன்று மடங்கு நீளம் இருக்க வேண்டும்.

நாயின் உரிமையாளர்கள் தங்கள் நாயை வெளியில் அழைத்து செல்லும் பொழுது அந்த நாய்க்கு நல்ல தரமான கழுத்துப்பட்டை / தோள்பட்டையை அணிவித்து அழைத்து செல்வது, அந்த நாய்க்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பை குறைந்தபட்சம் உறுதி செய்யும்.

இவ்வாறான விடயங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 23 வகை நாய் இனங்களின் பட்டியல்:

1. பிட்புல் டெரியர் 2. தோசா இனு 3. அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர் 4. பிலா ப்ரேசிலேரியா 5. டோகா அர்ஜென்டினா 6. அமெரிக்கன் புல் டாக் 7. போயர் போயல் 8. கன்சல் 9. சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக் 10. காக்கேஷியன் ஷெபர்டு டாக் 11. சவுத் ரஷ்யன் ஷெபர்டு டாக் 12. டோன் ஜாக் 13. சர்ப்ளேனினேக் 14. ஜாப்னிஸ் தோசா 15. அகிதா மேஸ்டிப் 16. ராட்வீலர்ஸ் 17. டெரியர் 18. ரோடீசியன் ரிட்ஜ்பேக் 19. உல்ப் டாக் 20. கேனரியோ அக்பாஸ் டாக் 21. மாஸ்கோ கார்ட் டாக் 22. கேன்கார்சோ 23. பேண்டாக்

டிரண்டிங்
விபத்தில் இழந்த பெண்ணின் காது, மீண்டும் கையில் உருவானது எப்படி?
மருத்துவம் / 04 ஜனவரி 2025
விபத்தில் இழந்த பெண்ணின் காது, மீண்டும் கையில் உருவானது எப்படி?

நாம் இதுவரை பலவிதமான பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி கேள்விப்பட்டிருப்போம். நீளமான மூக்கை குட்டியாக மாற்றவும

இளவரசி டயானாவின் மறுபிறவி! அதிர்ச்சியை அள்ளி தெளிக்கும் ஆஸ்திரேலிய சிறுவன்
உலகம் / 17 நவம்பர் 2024
இளவரசி டயானாவின் மறுபிறவி! அதிர்ச்சியை அள்ளி தெளிக்கும் ஆஸ்திரேலிய சிறுவன்

இளவரசி டயானா வாழ்ந்த, பிரிட்டிஷ் ராயல் குடும்பத்தின் ஸ்காட்டிஷ் இல்லமான பால்மோரல் கோட்டை, டயானா சிறு

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
நகரும் ராட்சத பனிப்பாறை. உலகை அச்சுறுத்தும் அண்டார்டிகா.
உலகம் / 19 டிசம்பர் 2024
நகரும் ராட்சத பனிப்பாறை. உலகை அச்சுறுத்தும் அண்டார்டிகா.

அண்டார்டிகா என்று சொன்னாலே நம் ஞாபகத்திற்கு வருவது ராட்சத பனிப்பாறைகளும், பென்குயின்களும் தான். இங்க

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி